×

உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு

 

காரைக்குடி, பிப்.18: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மகளிரியல் துறை தலைவர் பேராசிரியர் மணிமேகலை வரவேற்றார். துணைவேந்தர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒருவர் உயிருடன் இருக்கும் போதே கிட்னி, ஈரல் மற்றும் திசுக்களை தானமாக வழங்கலாம். இறந்த பிறகு அனைத்து உறுப்புகளையும் தானமாக வழங்கலாம்.

பல்கலைக்கழக மானிய குழு வழிகாட்டுதலின்படி 18வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான உறுதிமொழியை வழங்கலாம் என்றார். கார்த்தி ப சிதம்பரம் எம்.பி துவக்கிவைத்து பேசுகையில், இந்தியாவில் 15000 உறுப்பு தான மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. 4லட்சம் பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். 50000 பேர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். உறுப்பு தானத்தின் அவசியத்தை அனைவரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றார்.

எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், எந்த ஒரு விசயத்தையும் மாணவர்களிடம் கொண்டு செல்லும் போது அது மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உறுப்பு தானம் செய்வதன் மூலம் இறப்புக்கு பின்னரும் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றார். ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பேராசிரியர் சேகர், கலைப்புல முதன்மையர் பேராசிரியர் தனுஷ்கோடி, தனியார் அறக்கட்டளை நிர்வாகி கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.

The post உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Department of Gynecology ,Alagappa University ,Youth Red Cross Society ,Prof. ,Manimegala ,Head ,Department of ,Gynecology ,Vice-Chancellor ,G. Ravi ,
× RELATED தேர்தல் விழிப்புணர்வு கருத்தரங்கம்