- Palur
- பாலூர் ஊராட்சி
- சட்டமன்ற உறுப்பினர்
- கண்ணன்
- 15 வது நிதிக் குழு மன்யம்
- 15 வது நிதிக் குழு
- தாதம்பேட் காலனி தெரு, பாலூர் உராடச்சி
- தின மலர்
தா.பழூர்: தா.பழூர் ஊராட்சியில், 15வது நிதிக்குழு மான்யம் 2023-24 திட்டத்தின் கீழ், ரூ.33.03 லட்சத்தில் பல்வேறு பணிகளை, சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் துவக்கி வைத்தார். இதில் தா.பழூர் ஊராட்சி, தாதம்பேட்டை காலனி தெருவில் 15வது நிதிக்குழு மான்யம் 2023-24ம் திட்டத்தின் கீழ், ரூ.9.14 லட்சத்தில், 30,000 லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணி. தா.பழூர் காலனி தெருவில் ரூ.3.70 லட்சத்தில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி. தா.பழூர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் மதிநிலா பள்ளி வரை, ரூ.7.18 லட்சத்தில், தார்சாலை அமைக்கும் பணி. தா.பழூர் ஆஞ்சநேயர் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் முதல் தா.பழூர் மெயின் ரோடு வரை ரூ.5.00 லட்சத்தில், தார்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழி, கிராம ஊராட்சி, இளநிலை பொறியாளர் ரேவதி, ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்னா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post ரூ.33.03 லட்சத்தில் வளர்ச்சி பணி துவக்கம் appeared first on Dinakaran.