×

சாராய வியாபாரி குண்டாசில் கைது

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம் பொருத்தானிருப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (33). இவர் மீது கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சாராயம் விற்பனை தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் குமரேசனை மீண்டும் கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர் இந்நிலையில் குமரேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் உட்ரோ வில்சன் , நாகை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதையடுத்து நாகை எஸ்.பி ஹர்ஷ்சிங், கலெக்டர் ஜானிடாம் வர்க்கிஸ்க்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவரை கலெக்டர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குமரேசனை கீழ்வேளூர் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சாராய வியாபாரி குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Tags : Kundasil ,Kilivelur ,Kumaresan ,Mariyamman Kovil Street, Poravacherry Panchayat, Nagapattinam District ,Kilvellur ,Dinakaran ,
× RELATED புதுமாப்பிள்ளையை வெட்டிய 3 பேர்...