×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில் கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை விற்பனை செய்ய வேண்டும்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி வட்டாரப்பகுதி ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள் கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. தற்பொழுது கம்பு, சோளம்,கேழ்வரகு, சாமை,வரகு, தினை, குதிரைவாலி உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. சிறுதானியங்களை சர்க்கரை நோயாளிகள் முதியவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இவற்றிலுள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்களின் காரணமாக சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சிறுதானியங்களை ஆர்வமுடன் வாங்குகின்றனர். இதனால் சிறுதானியங்களுக்கான பிரத்யேகமான விற்பனை நிலையங்கள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் துவக்கப்பட்டு வருகின்றது. இங்கு விலை அதிகமாக உள்ளது.

 

The post பொதுமக்கள் எதிர்பார்ப்பு அரவக்குறிச்சி பகுதி ரேஷன் கடைகளில் கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை விற்பனை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...