×

கரூர் அமராவதி மேம்பாலத்தில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுமா?

கரூர்: கரூர் அமராவதி மேம்பாலத்தில் வாகன ஓட்டிகளை பீதிக்குள்ளாக்கும் வகையில் மிக அதிக வேகத்தில் செல்லும் பிற வாகனங்கள் கண்காணிக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் லைட்ஹவுஸ் கார்னர் திருமாநிலையூர் இடையே அமராவதி ஆறு செல்வதால் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேம்பாலத்தின் மையப்பகுதியில் இரு வழிப்போக்குவரத்து எளிதாக நடைபெறும் வகையில் தடுப்புக் கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், மேம்பாலத்தில், மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நவீன பைக்குகளை வைத்துள்ள இளைஞர்கள் மிக அதிக வேகத்தில் செல்வதால் பிற வாகன ஓட்டிகள் பீதிக்குள்ளாகி வருகின்றனர். இளைஞர்களின் மிக அதிக வேகம் காரணமாக மேம்பாலத்தில் அவ்வப்போது சிறு விபத்துக்களும் ஏற்படுகிறது.

The post கரூர் அமராவதி மேம்பாலத்தில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்கள் கண்காணிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Karur ,Amaravati River ,Karur Lighthouse Corner Tirumadianyur ,Dinakaran ,
× RELATED பசுபதிபாளையம் பாலம் அருகே அமராவதி...