×

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குலசேகரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

குலசேகரம், பிப்.18: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதராவிலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய ஒன்றிய அரசை கண்டித்தும் குமரி மேற்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் சார்பில் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மேற்கு மாவட்ட விவசாய காங்கிரஸ் தலைவர் எபனேசர் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினு லால் சிங் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கண்டன உரையாற்றினார். இதில் திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெபா, திருவட்டார் வட்டார ஐன்டியூசி தலைவர் காஸ்ட்டன் கிளீட்டஸ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் ஆஸ்கர்பிரடி, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெயசிங், பேரூராட்சி தலைவர்கள் ஜெயந்தி ஜேம்ஸ், அகஸ்டின், பொன் ரவி, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக குலசேகரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Kulasekhara ,Delhi ,Kulasekaram ,Kumari West ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...