×

புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

தர்மபுரி: காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை, காவல் துறை இணைந்து தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரிமங்கலம் ஒன்றியம் கும்பாரஅள்ளியில் ஒரு மளிகை கடை மற்றும் பாலக்கோடு தாலுகாவில் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட பொம்மனூர் கிராமத்தில் ஒரு மளிகை கடையில் ஆய்வு செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

The post புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Karimangalam ,Palakodu ,District Administration ,Food Safety ,Dinakaran ,
× RELATED மாம்பழ கடைகளை அமைத்த வியாபாரிகள்