×

2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

 

திருத்தணி: திருத்தணி ஒன்றியம், சிறுகுமி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பெருமாள்(26). இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பெருமாள் தனது பைக்ல் கடந்த, 11ம் தேதி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை அருகே செல்லும் போது மற்றொரு பைக் எதிரே வந்தது. இரண்டு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதனால் பலத்த காயமடைந்த பெருமாள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று அதிகாலையில் பெருமாள் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

The post 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Balakrishnan ,Thiruthani Union ,Sirukumi village ,Perumal ,Tiruthani ,K.G. ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து