×

திருநின்றவூர் நகராட்சியில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை: சா.மு.நாசர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

ஆவடி: திருநின்றவூர் நகராட்சியில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனையை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் திறந்து வைத்தார். ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் நகராட்சியில் கால்நடை மருத்துவமனை கட்டடம் முழுமையாக பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதனால் கால்நடைகளை சிகிச்சைக்கு கொண்டுவரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால் புதிய கால்நடை மருத்துவமனை கட்டித்தர பொதுமக்கள் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கையின் பேரில், சா.மு.நாசர் எம்எல்ஏவின் முயற்சியில், நபார்டு திட்டத்தில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் பழைய கால்நடை மருத்துவமனை அருகே புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு அதை மக்கள் பயன்பாட்டிற்காக கால்நடை மருத்துவமனையை நேற்று ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருநின்றவூர் நகர மன்ற தலைவர் உஷாராணிரவி, ரவிக்குமார், அண்ணாகுமார், அவை தலைவர் அன்பழகன், நகர துணை செயளாலர் நாகராஜ், கமலக்கண்ணன், நகர மன்ற உறுப்பினர்கள் சசிகலா, தங்கராஜ், ஜெயக்குமார், கிருஷ்ணன், வட்ட திமுக செயலாளர்கள் ஜீவானந்தம், மாதவன், மகேஷ்குமார், ரவி, கோடீஸ்வரன், யோகானந்தம் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திருநின்றவூர் நகராட்சியில் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை: சா.மு.நாசர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruninnavur Municipality ,S.M. ,Nassar ,MLA ,Aavadi ,Aavadi Assembly ,S.M. Nasar ,Thiruninnavur Municipality ,Avadi block ,S.M.Nasser ,
× RELATED நகர்ப்புற வேலை உறுதி திட்டம்...