×

டெல்லி போராட்டத்திற்கு தீர்வு காண குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அவசர சட்டம் கொண்டு வரணும்: விவசாய சங்க தலைவர் கோரிக்கை

சண்டிகர்: வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டுடெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கி உள்ளனர். பஞ்சாப், அரியானா எல்லையான ஷம்பு உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒன்றிய அரசை கண்டித்து அரியானாவில் விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணி நடத்தினர். பஞ்சாப்பில் பாட்டியாலா உள்ளிட்ட நகரங்களில் பாஜ தலைவர்கள் வீடுகளை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, ஷம்பு எல்லையில் நேற்று பேட்டி அளித்த விவசாய சங்கத் தலைவர் சர்வன் சிங் பந்தேர், ‘‘விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண நினைத்தால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான அவசர சட்டத்தை ஒரே இரவில் ஒன்றிய அரசு கொண்டு வரலாம். அதன் பிறகு மற்ற கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்’’ என்றார். ஒன்றிய அமைச்சர்கள் இன்று 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் பந்தேர் கூறியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

The post டெல்லி போராட்டத்திற்கு தீர்வு காண குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அவசர சட்டம் கொண்டு வரணும்: விவசாய சங்க தலைவர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chandigarh ,Shambu ,Punjab ,Ariana ,Aryana ,Farmers Union ,President ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...