×

குடிசை தீப்பிடித்து பெயின்டர் பலி

துரைப்பாக்கம்: நள்ளிரவில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்ததில் தூங்கிக் ெகாண்டிருந்த பெயின்டர் உடல் கருகி பலியானார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி ராஜ் (46), பெயின்டர். இவரது மனைவி பேபி (38). இவர்களுக்கு மீனா (13), ஜோனா (10) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஆண்டனிராஜ் கடவுளிடம் பிரார்த்தனை செய்துவிட்டு முதல் மாடியில் உள்ள குடிசை வீட்டிற்கு சென்று தனியாக தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு திடீரென குடிசை தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டனர். மேலும் கீழ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது குடும்பத்தினரும் பதறி அடித்து எழுந்து கூச்சலிட்டனர். அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த தாழம்பூர் சட்டம் -ஒழுங்கு ஆய்வாளர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுசேரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த ஆண்டனி ராஜ் வெளியில் வர முடியாமல் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்டு அவரது மனைவி, குழந்தைகள் கதறினர். பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசையில் ஒருவர் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குடிசை தீப்பிடித்து பெயின்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Anthony Raj ,Uthandi Colony ,East Coast Road, Chennai ,Meena ,
× RELATED நிலப்பிரச்னையை தீர்த்து வைப்பதாக...