×

தேர்தல் பத்திரத்தில் கம்யூனிஸ்ட் ஒரு ரூபாயும் பெற்றதில்லை: முத்தரசன் விளக்கம்

சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பாஜ ஒன்றிய அரசு பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து செயல்படும் தனது கூட்டுக் களவாணி செயலை மறைத்துக் கொள்ள தேர்தல் பத்திரம் திட்டத்தை வெளியிட்டது. இத்திட்டம் செல்லாது என உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ள நிதி என்று வெளியாகி இருப்பது சரியல்ல. அது முற்றிலும் தவறான தகவல். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பிய நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி “தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை” என்று கடிதம் எழுதியுள்ளது.

முத்தரசன் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், மேகதாது அணை குறித்து கர்நாடக முதலமைச்சர் அறிவிப்பு மாநிலங்களிடையே நிலவும் நல்லுறவுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது. சுமுக உறவுக்கு குந்தகம் ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

The post தேர்தல் பத்திரத்தில் கம்யூனிஸ்ட் ஒரு ரூபாயும் பெற்றதில்லை: முத்தரசன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Communist ,Mutharasan ,CHENNAI ,Communist Party of India ,State Secretary ,BJP government ,Supreme Court ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...