×

டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்

தஞ்சாவூர்: வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க ேவண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 5 வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ஒன்றிய பாஜ அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும் தஞ்சையில் நேற்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் தலைமையில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் ரயில்நிலையம் முன்பு அருகே குவிந்தனர். பின்னர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறு அங்கிருந்த பேரிகார்டுகளை அகற்ற விவசாயிகள் முயன்றனர். இதனால் அவர்களுக்கு போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தடுப்புகளை தகர்த்து ரயில் நிலையத்துக்குள் சென்ற விவசாயிகள் திருச்சியில் இருந்து சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த சோழன் விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்தும், படுத்தும் போராட்டம் நடத்தினர். பின்னர் 55க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்த போலீசார் மாலையில் விடுவித்தனர்.

The post டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Delhi ,BJP government ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...