×

எல்ஐசியின் புதிய திட்டம் அம்ரித் பால் அறிமுகம்

சென்னை: எல்ஐசி ஆப் இந்தியா ‘அம்ரித்பால்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை ஒன்றிய நிதித்துறை செயலாளர் விவேக் ஜோஷி நேற்று அறிமுகம் செய்து வைத்தார். எல்ஐசியின் அம்ரித்பால் ஒரு தனிநபர், சேமிப்பு, ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக, போதுமான தொகையை சேமிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாலிசி தொடங்கப்பட்ட காலம் முதல் முதிர்வு காலம் வரை, ஒவ்வொரு பாலிசி ஆண்டு முடிவிலும் ரூபாய் ஆயிரம் அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கு ரூ.80 வீதம் உத்தரவாதமான தொகையாக, பாலிசி அமலில் உள்ள காலத்தில், பாலிசி கணக்கில் வரவு வைக்கப்படும்.

இந்த பாலிசி 30 நாட்கள் முதல் அதிகபட்சமாக 13 ஆண்டுகள் வரை உள்ள குழந்தைகளுக்கு ஏற்றது. பாலிசி குழந்தைகளின் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள காலத்தில் முதிர்வு அடையும். 5, 6 அல்லது 7 ஆண்டுகள் குறுகிய பிரீமியம் செலுத்தும் காலத்தை தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. மேலும், வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்துதலுக்கான குறைந்தபட்ச பாலிசி காலம் 10 ஆண்டுகள். ஒற்றை பிரீமியம் செலுத்தும் பாலிசிகளில் பாலிசி காலம் 5 ஆண்டுகள்.

வரையறுக்கப்பட்ட / ஒற்றை பிரீமியம் செலுத்துவதற்கான அதிகபட்ச பாலிசி கால அளவு 25 ஆண்டுகள் மற்றும் பொது சேவை மையங்கள் POSP- LICPSC-SPV மூலம் பெறப்பட்ட பாலிசிகளின் கால அளவு 20 ஆண்டுகள். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.2,00,000. மேலும் அதிகபட்ச காப்பீட்டுத் தொகைக்கு வரம்பு இல்லை. (நிபந்தனைகளுக்கு உட்பட்டு). பாலிசி முதிர்வு தேதியில், அமலில் உள்ள பாலிசியில், முதிர்வு பெறும் வசதியும், முதிர்வு தொகையை 5, 10 அல்லது 15 ஆண்டு தவணைகளில் பெறும் வசதியும் உள்ளது. இவை தவிர மேலும் பல வசதிகள் கொண்ட பங்கு சந்தை சாராத ஒரு திட்டம்.

The post எல்ஐசியின் புதிய திட்டம் அம்ரித் பால் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : LIC ,Amrit Paul ,CHENNAI ,India ,Amritpal ,Union Finance Secretary ,Vivek Joshi ,Dinakaran ,
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...