×

திருப்போரூர் ஒன்றியத்தில் ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்: கலெக்டர் திறந்து வைத்தார்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2 புதிய கூடுதல் பள்ளி கட்டிடங்களை முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் பல்வேறு அரசு பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.94 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டிடம் மற்றும் நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாபேட்டை கிராமத்தில் ரூ.37.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 4 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டிடத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதன்படி, கேளம்பாக்கத்தில் நடைபெற்ற பள்ளி திறப்பு விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யா வினோத் கண்ணன் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், புதிய பள்ளி கட்டிடத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் அனாமிக்கா ரமேஷ், ஒன்றிய ஆணையாளர் பூமகள் தேவி, தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பையனூர் சேகர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாபேட்டை கிராமத்தில் நடைபெற்ற பள்ளி திறப்பு விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி, ஒன்றிய கவுன்சிலர் வெண்ணிலா நந்தகுமார், திமுக நிர்வாகிகள் கெஜராஜன், ராஜவேலு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post திருப்போரூர் ஒன்றியத்தில் ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்: கலெக்டர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruppurur Union ,Tiruporur ,Chief Minister ,Tamil Nadu ,M.K.Stalin ,Chief Secretariat ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...