×

அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்.. ரஷ்ய அதிபர் புதின் பொறுப்பேற்க அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தல்

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் ஆட்சிக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் தீவிரமாக செயல்பட்டு வந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி சிறையில் உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி அதிபரின் புதினின் ஊழல் குறித்து தொடச்சியாக பொதுவெளியில் பேசிவந்தார். அவரது நடவடிக்கைகள் அரசு எதிராக மக்களின் வீதியில் இறங்கி போராட வைத்தது.

இதனிடையே நச்சு கலந்த உணவை சாப்பிட்டு பாதிப்புக்குள்ளாகி ஜெர்மனியில் சிகிச்சை பெற்றுவிட்டு கடந்த 2021ல் நாடு திரும்பிய அலெக்ஸி நவால்னியை புதின் அரசு பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைத்தது. அறக்கட்டளை மூலமாக முறைகேடாக பணம் பெற்றது. பயங்கரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், நாஜி கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இறுதியாக அலெக்ஸி நவால்னிக்கு கடந்த மாதம் ஆகஸ்ட் மாதம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் வடக்கு சைபீரியாவில் ரஷ்யவின் பகுதியில் உள்ள ஆர்டிக் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்த அலெக்ஸி நவால்னி உடல்நல குறைவால் உயிரிழந்ததாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

அலெக்ஸி நவால்னியின் உயிரிழப்பு சாதாரண மரணம் இல்லை என்றும், புதினால் நிகழ்த்தப்பட்ட அரசியல் படுகொலை என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே தன்னுடைய கணவர் இறப்புக்கான கரணம் நம்பும்படி இல்லை என்று அவரது மனைவி யூலியா தெரிவித்துள்ளார். அலெக்ஸி நவால்னியின் மரணத்திற்கு அதிபர் புதின் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் வலிறுத்தியுள்ளனர்.

The post அலெக்ஸி நவால்னி சிறையில் மரணம்.. ரஷ்ய அதிபர் புதின் பொறுப்பேற்க அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Alexei Navalny ,United States ,Britain ,Germany ,President Putin ,Moscow ,Russian President Putin ,Russia ,President ,Putin ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய...