×

பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மழுப்பல் பதில்!

கன்னியாகுமரி: பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இன்று இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி இன்று பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது டெல்லியில் உள்ள விஜயதாரணி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததற்கு காங்கிரஸ் மேலிடம் மறுப்பு எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜகவில் இன்று சேர உள்ளதாக வெளியான தகவலுக்கு மட்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி மறுப்பு தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு, இன்று சேர வாய்ப்பு இல்லை என விஜயதரணி மழுப்பல் பதில் தெரிவித்தார்.

பாஜகவில் சேர உள்ளதாக வெளியான தகவலை திட்டவட்டமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி மறுக்கவில்லை. தேசியக் குழு கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் விஜயதரணி பாஜகவில் சேருவார் என தகவல் வெளியாகி இருந்தது. பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பாஜக நிகழ்ச்சியில் விஜயதரணி பாஜகவில் சேர்வார் என தகவல். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விஜயதாரணி கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

 

The post பாஜகவில் இன்று இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மழுப்பல் பதில்! appeared first on Dinakaran.

Tags : Congress ,Bajaga ,L. A. Vijayadarani ,KANNYAKUMARI ,BAJAKA ,BJP ,Congress Party ,Wlavangoda ,MLA ,Visittharani ,Dinakaran ,
× RELATED பாஜகவில் இணைந்த 23 பேரின் ஊழல் வழக்கு...