×

நவரை அறுவடை பருவம் தொடங்கியது அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4,680 மூட்டைகள் வரத்து

*606 ரக நெல் அதிகபட்சமாக ரூ.2,116க்கு விற்பனை

ராணிப்பேட்டை : நவரை அறுவடை பருவம் தொடங்கியதால், அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4,680 மூட்டைகள் வந்துள்ளது. இதில் 606 ரக நெல் அதிகபட்சமாக ரூ.2,116க்கு விற்பனை செய்யப்பட்டது. நவரை அறுவடை பருவம் தொடங்கியதால் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 75 கிலோ கொண்ட மூட்டை 606 ரக நெல் அதிகபட்ச விலையாக ரூ.2,116க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 4,500 நெல் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தன.
இந்நிலையில் நேற்று 75 கிலோ நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் பின்வருமாறு:

ஏடிடி 37 வகை ரக குண்டு நெல் குறைந்த பட்ச விலை ரூ.1,243க்கும், அதிகபட்ச விலையாக ரூ.1,383க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோ 51 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,469க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,539க்கும், 606 வகை ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,479 க்கும், அதிகப்பட்ச விலையாக ரூ.2,116 க்கும், சோனா ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.2,009க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,029க்கும், ஆர்.என்.ஆர் வகை ரக நெல் குறைந்த பட்ச விலையாக ரூ.1,979க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,097க்கும், அன்னபூரணி ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,059க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சுமங்கலி ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாகரூ.2,003க்கும், அம்மன் ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,061க்கும், 110 ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,359க்கும், ஏடிடி 36 குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,469க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொப்பரை தேங்காய் ஒரு கிலோ அதிகபட்ச விலையாக ரூ.75க்கும், உளுந்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.9,000க்கும் விற்பனை ஆனது.

விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் விவசாயிகள் சோளம், கம்பு, உளுந்து, கேழ்வரகு, தேங்காய் கொப்பரை, நிலக்கடலை ஆகிய விவசாய பயிர்களையும் அறுவடை செய்து அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.மேலும் விற்பனை கூட்டத்தில் நெல் மூட்டைக்கு நல்ல விலை கிடைப்பதாலும் உடனுக்குடன் விற்று விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மேற்கண்ட இந்த தகவலை அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.

The post நவரை அறுவடை பருவம் தொடங்கியது அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4,680 மூட்டைகள் வரத்து appeared first on Dinakaran.

Tags : Navarre harvest ,Ammur ,sales hall ,Navarre ,Ammur regulation ,hall ,Ammur regulation sales hall ,Dinakaran ,
× RELATED அம்மூர் காப்புக்காடு பகுதியில்...