×
Saravana Stores

ஊட்டி காமராஜ் சாகர் அணையில் பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுப்பதால் விபத்து அபாயம்

ஊட்டி : ஊட்டி காமராஜ் சாகர் அணையில் பாறைகளின் மீது சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் எடுக்க முயல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மற்றும் படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். இது தவிர பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இயற்கையோடு இணைந்த சுற்றுலாவை விரும்பும் நிலையில், அணைகள், நீரோடைகள் மற்றும் வனங்களுக்குள் செல்கின்றனர். இதனால், தற்போது வனத்துறையும் பல்வேறு பகுதிகளில் சூழல் சுற்றுலா ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி அருகே தலைக்குந்தா பகுதியில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதியிலும் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் வனத்துறையினர் சூழல் சுற்றுலா ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள காமராஜ் சாகர் அணையை ஒட்டியுள்ள கரைப்பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுத்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

ஒரு சிலர் அந்த அணையின் நடுவே உள்ள பாறைகளின் மீது புகைப்படம் மற்றும் செல்பி எடுக்கின்றனர். இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் அணையில் உள்ள பாறைகளின் மீது சுற்றுலா பயணிகள் ஏறாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும். மேலும், அணைகளுக்குள் சுற்றுலா பயணிகள் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டி காமராஜ் சாகர் அணையில் பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுப்பதால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kamaraj ,Sagar Dam ,Kamraj Sagar Dam ,Nilgiri district ,Ooty Kamraj Sagar Dam ,
× RELATED உருளைக்கிழங்கு பயிர் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்