×

வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தர்மபுரி, பிப்.17: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(36). விவசாயியான இவரது நிலத்தில், கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பன்னிஅள்ளி புதூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 10 பேர் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர். அதனை சரவணன் தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டது. அப்போது, பிரகாஷ் சரமாரியாக கத்தியால் குத்தியதில் சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில், பிரகாஷ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் சாந்தியிடம் மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் பரிந்துரை செய்தார். இதன்பேரில், பிரகாஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை, சேலம் மத்திய சிறையில் உள்ள பிரகாஷிடம் போலீசார் வழங்கினர்.

The post வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Saravanan ,Kerakodahalli ,Karimangalam ,Dharmapuri district ,Prakash ,Kaveripatnam Pannialli Budoor ,Kaveripatnam, Krishnagiri district ,
× RELATED பட்டுக்கூடு வரத்து சரிவு