×

ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே அண்ணா சிலை எதிரில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சேகர், மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர்கள் சின்ராஜ், குணசேகர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

The post ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : United Farmers Front Demonstration ,Krishnagiri ,United Farmers Front ,Union BJP government ,Anna statue ,Krishnagiri New Bus Station ,Union Government.… ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்