×

சிவகங்கை அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சிவகங்கை, பிப். 17: சிவகங்கை அருகே பெருமாள்பட்டியில் வாகன ஓட்டுனர்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கினார். சிவகங்கை அருகே பெருமாள்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு விழா நடந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மூக்கன் தலைமை வைத்தார். பின்னர் வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்களில் இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் பேசுகையில், ‘‘வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும். அதிவேகத்தில் செல்ல கூடாது. 4 சக்கர வாகனங்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிய வேண்டும். டூவீலர்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். செல்போன் பேசியபடி வாகனம் ஓட்ட கூடாது’’ என்றார். விழாவில் நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

The post சிவகங்கை அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,District Transport Officer ,Mookan ,Perumalpatti ,National Road Safety Month awareness ceremony ,District Transport Office ,Sivaganga ,Dinakaran ,
× RELATED ரம்ஜான் பண்டிகை எதிரொலி: சிவகங்கை...