×

உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

 

சிவகங்கை, பிப். 17: ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலிப்பதவியிடங்களுக்கான தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித்துடன் ஆலோசனை நடத்தினார். சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலிப்பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து தேர்தல் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி மையங்களின் விவரம், ஊரக உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் இருப்பு விவரம், நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு விவரம், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடி பொருட்கள் இருப்பு விவரம் மற்றும் நிலுவையிலுள்ள தேர்தல் வழக்குகளின் தற்போதைய நிலை குறித்த விவரம் உட்பட தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. உடன் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) அன்பு மற்றும் அலுவலக மேலாளர் பத்மநாபன் ஆகியோர் இருந்தனர்.

The post உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Tamil Nadu ,State ,Palanik Kumar ,Sivaganga Collector ,Asha Ajith ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்