×

குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் பொங்கல் விழா

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் வருடம் தோறும் நடைபெற்று வரும் பொங்கல் வைக்கும் விழா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கல் வைப்பதற்காக வேண்டுதல் செய்யப்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து படையலிட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கினர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் தெய்வேந்தஅடிகளார் மற்றும் கிராம மக்கள் சார்பில் செய்திருந்தனர்.

The post குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோயிலில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Kumilangadu Adhi Nagathamman Temple ,Pongal Wai Ceremony ,Mailaduthura District ,Amman ,Diyaradhan ,Pongal ,Kumilangadu Aadi Nagathamman Temple ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா