- திண்டுக்கல்
- திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் திருவள்ளுவர் இலக்கியப் பேரவை
- உதவி பேராசிரியர்
- சண்முகபிரியா
- தாந்தபானி
- மதுரை…
திண்டுக்கல், பிப். 17: திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் திருவள்ளுவர் இலக்கிய பேரவை சார்பில் தொல்காப்பியர் நூல் வெளியிட்டு விழா கல்லூரியில் நடந்தது. உதவி பேராசிரியர் சண்முகப்பிரியா வரவேற்றார். உதவி பேராசிரியர் தண்டபாணி அறிமுக உரை நிகழ்த்தினார். மதுரை தியாகராஜர் கல்லூரி தமிழிசை ஆய்வு மைய முதன்மை ஆய்வாளர் மம்மது, மதுரை தொல்காப்பியர் மன்ற தலைவர் இருளப்பன், மதுரை வருமான வரி ஆலோசகர் சங்கரகுமரன் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி முதல்வர் நாகநந்தினி தலைமை வகித்து நூலை வெளியிட புரவலர் சுந்தரராசன் பெற்று கொண்டார். பேராசிரியர் ராமசாமி, தமிழ் பண்பாட்டு மைய முன்னாள் இயக்குனர் திலகவதி, சிவகாசி அரசு கலை கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் சிங்கராசா மதிப்புரை வழங்கினர். திருவள்ளுவர் இலக்கிய பேரவை தலைவர் துரை முருகு ஏற்புரை வழங்கினார்.
கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் ராஜலட்சுமி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் இலக்கிய பேரவை செயலாளர் கணேசன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் இலக்கிய பேரவை பொருளாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் மாரியப்பன் செய்திருந்தனர்.
The post திண்டுக்கல்லில் நூல் வெளியீட்டு விழா appeared first on Dinakaran.