×

திருவட்டார் அருகே கால்வாயில் மிதந்து வந்த பாம்பால் பரபரப்பு

குலசேகரம், பிப். 17: திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை – அணைக்கரை தடுப்பணையில் இருந்து தொடங்கும் அருவிக்கரை வலதுகரை கால்வாய் திருவட்டார் வழியாக செல்கிறது. விளாக்கோடு பகுதியில் இந்த கால்வாய் தண்ணீரில் நல்ல பாம்பு ஒன்று சுமார் 10 அடி நீளத்தில் நீந்தி கொண்டிருந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்் அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் நீண்ட நேரத்திற்கு பின்பு சம்பவ இடம் வந்தனர். அதற்குள் பாம்பு அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் ெசன்று மறைந்ததாக தெரிகிறது. நீண்ட நேரம் தேடி போராடியும் பாம்பை காணவில்லை. இதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து சென்றனர். நல்ல பாம்பை பிடித்து சென்று விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த அப்பகுதி பொதுமக்களுக்கு வனத்துறையினரால் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது.

The post திருவட்டார் அருகே கால்வாயில் மிதந்து வந்த பாம்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvattara ,Kulasekaram ,ARUVIKARAI CANAL ,THIRUVATAR ,ARUVIKARA ,Blakoda ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...