×

நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், பிப். 17: பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வு கொள்கையை உருவாக்க வேண்டும். பிஎஸ்என்எல்லில் 4ஜி, 5ஜி சேவையை உடனே தொடங்க வேண்டும். ஊதிய தேக்கநிலை பிரச்னையை உடனே தீர்க்க வேண்டும். 1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெறவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.26 ஆயிரம் என்பதை அமல்படுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜூ, சுயம்புலிங்கம், இந்திரா, ராஜகோபால், பிரதீப்குமார், பழனிச்சாமி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவிலில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Nagercoil ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் ஒழுகினசேரி, புத்தேரி...