×

தொழில் போட்டி காரணமாக திருநங்கையை கொலை செய்த 4 திருநங்கைகள் கைது

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரியில் திருநங்கையை கொலை செய்த 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். பெரும்பாக்கம், நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சிம்மி (எ) சாதனா (21). திருநங்கையான இவரை சில நாட்களாக காணவில்லை என உறவினர்கள், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 25ம் தேதி புகார் அளித்தனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 28ம் தேதி செம்மஞ்சேரி, பழத்தோட்டம் சாலை உள்ள ஒரு காலி இடத்தில், தலை நசுங்கிய நிலையில் சிம்மி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கடந்த 3ம் தேதி 60 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 திருநங்கைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த நிலையில், சிறையில் இருந்து 5 திருநங்கைகளை செம்மஞ்சேரி போலீசார் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தபோது, திருநங்கை சிம்மியை, அபர்ணா (27), ஆனந்தி (35), ரதி(36), அபி(32) ஆகிய 4 திருநங்கைகளும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் ஏற்கனவே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நிலையில், மேலும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

 

The post தொழில் போட்டி காரணமாக திருநங்கையை கொலை செய்த 4 திருநங்கைகள் கைது appeared first on Dinakaran.

Tags : Durai Pakkam ,Semmancherry ,Simmi (A) Sadhana ,Urban Development Board ,Purumbakham ,Perumbakkam ,
× RELATED பூத் ஏஜென்டாக பணியாற்றியதற்கு பணம்...