×

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 2 பேர் பலி, இன்டர்நெட் சேவை முடக்கம்

இம்பால்: மணிப்பூரின் சூரசந்த்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் சிம்லால்பால் தடை செய்யப்பட்ட ஆயுத குழுவினருடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் இரவு எஸ்பி மற்றும் துணை ஆணையர் அலுவலக வளாகத்தை கும்பல் முற்றுகையிட்டது. அங்கிருந்த அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. எஸ்பி அலுவலக வளாகத்தில் இருந்த தேசியக்கொடியும் சேதப்படுத்தப்பட்டது.

வன்முறையின் போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் அரசு பதிவுகள் அழிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு பதற்றம் உருவானது. பாதுகாப்பு படையினர் கும்பலை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு லேசான தடியடியும் நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 42 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், உயிர் இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதால் சூரசந்த்ப்பூர் மாவட்டத்தில் இன்டர்நெட் சேவையை முடக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

*7 வீரர்கள் சஸ்பெண்ட்
மணிப்பூரின் கிழக்கு மாவட்டத்தில் சிக்காரெல்லில் உள்ள சிறப்பு படையின் முகாமில் இருந்து கடந்த 13ம் தேதி கும்பல் ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றது. இவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பணியின்போது அலட்சியமாக செயல்பட்டு கடமை தவறியதாக 7 வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனுமதியின்றி தலைமையகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 2 பேர் பலி, இன்டர்நெட் சேவை முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Imphal ,Simlalpal ,Manipur ,Surazandpur district ,Chief Constable ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கிராம...