×

உந்துகுழாய் இணைக்கும் பணிகள் காரணமாக மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து, அடையாறு கழிவுநீர் உந்துநிலையத்திற்கு உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து அடையாறு கழிவுநீர் உந்து நிலையத்திற்கு உந்துகுழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை வடக்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது.

எனவே, தேனாம்பேட்டை, மண்டலம்-9க்கு உட்பட்ட கோபாலபுரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள இயந்திர நுழைவாயில்களில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை எற்பட்டால், அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற கீழ்க்காணும் பகுதி அலுவலர்கள் தேனாம்பேட்டை பகுதிப் பொறியாளர் – 8144930909, துணை பகுதிப் பொறியாளர்கள் – 8144930259, 8144930225, 8144930227 என்ற செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post உந்துகுழாய் இணைக்கும் பணிகள் காரணமாக மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mylapore Sewage ,Station ,CHENNAI ,Adyar ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!