×

கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ள கோட்டக்கரை ஆற்றை தூர் வாரி தடுப்பணை கட்டப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டக்கரை ஆற்றில் கருவேல மரங்களை அகற்றி தூர் வாரி தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற் களஞ்சிய பகுதியாக விளங்கும் ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள கோட்டைக்கரை ஆறு சுமார் 30 கி.மீ தூரம் கொண்டது. இந்த ஆற்றில் பெரும்பாலான இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்போன்று காட்சியளிக்கின்றன. ஆற்றை தூர் வாரி கரைகளை பலப்படுத்தாதாலும், தடுப்பணை கட்டாததாலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் வீணாகி வருவது வழக்கமாக உள்ளது.

எனவே சனவேலி கோட்டைகரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் மழைநீர் வீணாக கடலுக்கு செல்வது தடுக்கப்படும். மேலும் ஆற்றை தூர் வாரி முட்புதர்களை அகற்றினால் தண்ணீரை சேமிக்க முடியும் இதன்மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து மழை காலங்களில் உபரி நீர் வீணாக கடலுக்கே செல்வதை தடுக்கும் வகையில் கோட்டக்கரை ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். மேலும் ஆற்றிலுள்ள வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்றி தூர் வார வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ள கோட்டக்கரை ஆற்றை தூர் வாரி தடுப்பணை கட்டப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kotakarai river ,RS Mangalam ,Kottakarai river ,RS ,Ramanathapuram district ,Mangalam ,Dinakaran ,
× RELATED சாலையின் நடுவே இடையூறாக மின் கம்பம்