×

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கண்டக்டரிடம் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ரூ.38,000 பெறுமான பயண சீட்டு திருட்டு

அண்ணாநகர்: கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ் (40). கோயம்பேடு காவல் நிலையத்தில் விரைவு பேருந்து கண்டக்டராக உள்ளார். இவர், நேற்று இரவு கோயம்பேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரில் கூறியதாவது: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி விரைந்து பேருந்து புறப்பட்டது. சிறிது தூரம் கோயம்பேடு 100 சாலை வழியாக சென்றபோது பேருந்தின் இருக்கையின் அருகில் வைத்திருந்த பயண சீட்டு பை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பேருந்து முழுவதும் தேடி பார்த்தும் பைக் கிடைக்கவில்லை. பையில் ரூ.20,000 ரொக்கப்பணம் மற்றும் 38 ஆயிரம் மதிப்புள்ள பயண சீட்டுகள் இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ”கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் விரைவு பேருந்தில் பணம் செய்தபோது சற்று நேரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. எதற்காக பேருந்தை நிறுத்தினீர்கள் என்று கேட்ட போது எனது பக்கத்தில் வைத்து இருந்த பயண சீட்டு மற்றும் அதில் இருந்த பணம் காணவில்லை என கூறினர். வெகுநேரமாக தேடியும் பயண சீட்டு, பை கிடைக்கவில்லை. திடீரென பேருந்தில் இருந்து எங்களை இறக்கிவிட்டனர்.

இதனால் கோபமடைந்த நாங்கள், எப்படி செல்வது என கேட்டோம். இதையடுத்து பயணிகள் அனைவரையும் வேறு பேருந்தில் ஏற்றி அனுப்ப ஏற்பாடு செய்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பாதி பேருந்துகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மாற்றப்பட்டுள்ளது. பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தபோதிலும் குற்ற சம்பவங்கள் குறைந்த பாடில்லை. பயணிகளிடம் திருடும் கும்பல் கண்டக்டரிடமும் திருடியது வடிவேலு காமெடியில் பயணிகளுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்பது போன்று உள்ளது. எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் குற்ற சம்பங்களை தடுக்க ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தவேண்டும்” என்றனர்.

The post கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கண்டக்டரிடம் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ரூ.38,000 பெறுமான பயண சீட்டு திருட்டு appeared first on Dinakaran.

Tags : Koyambedu bus station ,Annanagar ,Jagathees ,Cuddalore district ,Koyambedu ,Station ,police station ,Pondicherry ,
× RELATED கோயம்பேடு பேருந்து நிலையத்தில்...