×

வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி இன்று விடுதலை!

மதுரை: வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி இன்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக 21 பேரில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி முத்துலட்சுமி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறியதை அடுத்து, போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் 17 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

The post வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி இன்று விடுதலை! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Mu. K. Beautiful ,Madurai ,Former Union Minister MLA ,Dwatadsir ,K. Alagiri ,2011 Assembly election ,Mu. K. ,Kalimuthu Police ,Malur ,Dasildar ,Union minister MLA ,K. ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...