×

சென்னை கோட்டூர்புரத்தில் போலீசாரிடம் தகராறு செய்து தாக்க முயன்றவர் கைது!!

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் போலீசாரிடம் தகராறு செய்து தாக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். தரமணி கானகத்தை சேர்ந்த டெய்லர் ரமேஷ் (50) குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் நேற்று வந்துள்ளார். குடிபோதையில் சென்ற ரமேஷ், பிரகாஷ் என்பவரின் கார் மீது இருசக்கர வாகனத்தை மோதியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு டெய்லர் ரமேஷ், பிரகாஷை தாக்கிவிட்டு சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் ரமேஷிடம் விசாரணை நடத்த சென்றுள்ளனர்.

The post சென்னை கோட்டூர்புரத்தில் போலீசாரிடம் தகராறு செய்து தாக்க முயன்றவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Koturpur, Chennai ,Chennai ,Taylor Ramesh ,Taramani Kanakath ,Prakash ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...