×

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F14 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது: கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது.! இஸ்ரோ அறிவிப்பு

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டிஎஸ்’ என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட்டில் பொருத்தி நாளை (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்குகிறது.

வானிலை செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது. 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் 4 உந்துசக்தி நிலைகள் ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்துசக்தியை கொண்டுள்ளன.ராக்கெட்டின் 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம், 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

The post ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F14 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது: கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது.! இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,ISRO ,Chennai ,Indian Space Research Institute ,G.G. ,Sathishtawan Space Exploration Centre ,Sriharikota, Nellore district, AP ,S. L. V. ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...