×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் 120 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் 120 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. தினசரி 740 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 120 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக ஆன்லைனில் முன்பதிவு வசதியுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 1,221 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள், மற்ற போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை முதல், கூடுதலாக 120 பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,215 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன.

கிளாம்பாக்கத்தில் இருந்து வார விடுமுறையை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை இயக்கப்படும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகளும், சனிக்கிழமை 85,265 இருக்கைகளும், ஞாயிற்றுக்கிழமை 86,411 இருக்கைகள் காலியாக இருப்பதாகவும், எனவே பயணிகள் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்கவும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் 14,440 முன்பதிவு இருக்கைகள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் 120 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Klampakkam bus station ,Transport Department ,Chennai ,Chennai Glampakkam ,Klampakkam bus ,Dinakaran ,
× RELATED தேர்தலில் வாக்களிப்பதற்காக 2...