×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் 120 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் 120 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது. தினசரி 740 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 120 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக ஆன்லைனில் முன்பதிவு வசதியுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 1,221 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் 120 பேருந்துகள் கூடுதலாக இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Klampakkam bus station ,Chennai ,Chennai Glampakkam ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...