- நாடாளுமன்ற தொகுதி திமுக பிரசார கூட்டம்
- ஈரோடு
- வெள்ளக்கோவில் ஒன்றியம்
- Vellakovil
- திமுக
- கே.சந்திரசேகரன்
- ஸ்டாலின்
- இந்தியா
- தின மலர்
வெள்ளக்கோவில், பிப்.16: ஈரோட்டில் இன்று (16ம் தேதி) நாடாளுமன்ற தொகுதி திமுக பரப்புரை கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு திமுகவினருக்கு வெள்ளக்கோவில் ஒன்றிய திமுக செயலாளர் கே.சந்திரசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும் என்னும் தலைப்பில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் இன்று (16ம் தேதி) மாலை 5 மணி அளவில் ஈரோடு ரிங் ரோடு பிரிவு, ஆனக்கல் பாளையத்தில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு வெள்ளக்கோவில் ஒன்றிய, நகர,பேரூர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், இந்நாள் – முன்னாள் மக்கள் பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவர்கள், கிளை செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு திமுக ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
The post ஈரோட்டில் இன்று நாடாளுமன்ற தொகுதி திமுக பிரச்சார கூட்டம்: வெள்ளக்கோவில் ஒன்றிய செயலாளர் அழைப்பு appeared first on Dinakaran.