×

பஸ்களை மீண்டும் இயக்கக் கோரி கடலாடியில் கடையடைப்பு

சாயல்குடி, பிப். 16: கடலாடியில் நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்கக் கோரி வர்த்தக சங்கம் சார்பில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடலாடி தாலுகா மற்றும் யூனியன் தலைநகராக உள்ளது. இங்கு அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு தாலுகா தலைமை மருத்துவமனை, நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகள் ,தனியார் நிறுவனங்கள், நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளது.

இதனால் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடலாடிக்கு இயக்கப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் கமுதி, முதுகுளத்தூரில் இருந்து இயக்கப்பட்ட இரண்டு அரசு பேருந்துகள், கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை என தெரிகிறது.

இதுபோன்று முதுகுளத்தூர், சாயல்குடி வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகள் இரவு நேரத்தில் கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் கடலாடி பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ் இயக்கக் கோரி வலியுறுத்தி கடலாடி நகர் வர்த்தக சங்க சார்பில் முழு கடையடைப்பு நடந்தது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post பஸ்களை மீண்டும் இயக்கக் கோரி கடலாடியில் கடையடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kadladadi ,Sayalkudi ,Kadladi ,Union ,Kadaladi ,Dinakaran ,
× RELATED சாயல்குடி குடிசை மாற்று வாரிய...