×

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத பிரமோற்சவ விழா: நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருத்தணி, பிப். 16: திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்த ஆண்டின் பிரம்மோற்சவ விழா நேற்று காலை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் இரவு விநாயகர் திருவீதி நடைபெற்றது. நேற்று இரவு கேடய வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் தேர் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் வருகின்ற 21ம் தேதி தேர் திருவிழாவும், 22ம் தேதி அதிகாலையில், வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து, 24ம் தேதி அதிகாலை, 5 மணியளவில் தீர்த்தவாரியும், சண்முகசுவாமி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

இந்த பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் வெள்ளி சூர்யபிரபை, பூதவாகனம், சிம்ம வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம், பல்லக்கு சேவை, வெள்ளி நாகவாகனம், அன்னவாகனம், வெள்ளிமயில் வாகனம், புலி வாகனம், யானை வாகனம் மரத்தேர், யாளிவாகனம், பாரிவேட்டை, குதிரை வாகனத்தில் உற்சவர் முருகப் பெருமான் தேர் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சு.தரன், இணை ஆணையர் க.ரமணி, அறங்காவலர்கள் உஷாரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் பணியாளர்கள், அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்துள்ளனர்.

The post திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத பிரமோற்சவ விழா: நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Masi Month Pramotsava Ceremony ,Tiruthani Subramania Swamy Temple ,Masi month Brahmatsava festival ,Utsavar Murugaperuman Valli ,Deivanai ,
× RELATED திருத்தணியில் ஆடி கிருத்திகை;...