×

நத்தம் கோயிலில் மாசி வளர்பிறை சஷ்டி பூஜை

நத்தம், பிப். 16: நத்தம் லட்சுமி விநாயகர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று மாசி மாத வளர்பிறை சஷ்டி பூஜை நடைபெற்றது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பழம், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதேபோல் கோவில்பட்டி செண்பக வல்லி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post நத்தம் கோயிலில் மாசி வளர்பிறை சஷ்டி பூஜை appeared first on Dinakaran.

Tags : Masi Varapirai Shashti ,Puja ,Natham Temple ,Natham ,Masi month ,Varapirai Sashti Puja ,Subramania ,Swamy ,Natham Lakshmi Vinayagar Temple ,Lord ,Muruga ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் தமிழ்...