×

நாட்டுத்துப்பாக்கியுடன் தலைமறைவானவர் கைது 6 மாதங்களுக்கு பிறகு சிக்கினார் செங்கம் அருகே வனவிலங்குகள் வேட்டை

செங்கம், பிப்.16: சாத்தனூர் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட சுற்றித்திரிந்த வழக்கில் நாட்டுத்துப்பாக்கியுடன் தலைமறைவான குற்றவாளியை 6 மாதங்களுக்கு பிறகு வனத்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் வனப்பகுதியில், வனச்சரக அலுவலர் னிவாசன் மற்றும் வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றிக்ெகாண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் செங்கம் அருகே உள்ள ஊர்கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த தாதன் மகன் துரைசாமி(45) என்பதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாட்டுத்துப்பாக்கி மூலம் துரைசாமி மற்றும் அவரது கூட்டாளிகள் 3பேர் சேர்ந்து வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட முயன்றதும், அந்த வழக்கில் நாட்டுத்துப்பாக்கியுடன் தலைமறைவானதும் தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறையினர், துரைசாமியை கைது செய்து சாத்தனூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

The post நாட்டுத்துப்பாக்கியுடன் தலைமறைவானவர் கைது 6 மாதங்களுக்கு பிறகு சிக்கினார் செங்கம் அருகே வனவிலங்குகள் வேட்டை appeared first on Dinakaran.

Tags : Sengam ,Chatanur forest ,Tiruvannamalai District ,Chatanur ,Nivasan ,department ,
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி