×

வாகனம் மோதி வாலிபர் பலி

ஊத்தங்கரை, பிப்.16: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வீரப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் தமிழரசன்(25). இவர், நேற்று முன்தினம் இரவு சேலம்- ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். ஊத்தங்கரை போலீசார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகனம் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Tamilarasan ,Veerappan Kotai ,Uthangarai, Krishnagiri district ,Salem-Uthangarai National Highway ,Dinakaran ,
× RELATED நாட்டுத்துப்பாக்கியை பதுக்கிய 2 பேர் கைது