- திருச்சி
- ஐஜி
- கார்த்திகேயன்
- தமிழ்நாடு தீ துறை
- திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- துறை
திருச்சி, பிப்.16: திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தமிழ்நாடு தீயணைப்புதுறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் நேற்று துவக்கி வைத்தார். இதில் தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை போட்டிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (15ம் தேதி) துவங்கியது. போட்டியை மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
இதில் மத்திய மண்டல துணை இயக்குனர் குமார், தீயணைப்புதுறை திருச்சி மாவட்ட அலுவலர் ஜெகதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் துறைரீதியாக அணிப்பயிற்சி, ஏணிப்பயிற்சி, கயிறு ஏறுதல், நீர்விடு குழாய் பயிற்சி போன்ற போட்டிகளும், தனித்திறன் போட்டிகளான இறகுப்பந்து, குண்டு எறிதல், கைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், நீச்சல் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளும் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதில் 5 மண்டலங்களை சேர்ந்த 200 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் வரும் 18ம் தேதி வரை நடைபெறுகிறது. நிறைவு விழாவில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை இயக்குனர் ஆபாஷ்குமார் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்குகிறார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
The post திருச்சியில் தீயணைப்பு துறை சார்பில் மாநில விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.