×

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது இன்று நலஉதவிகள் வழங்கல்

 

புதுக்கோட்டை, பிப்.16: தமிழக முதல்வர் தலைமையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் மீது பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா இன்று (16ம்தேதி) முற்பகல் 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 13,674 மனுக்களில் 8,741 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, 1,368 பயனாளிகளுக்கு அமைச்சர்கள் ரகுபதி, ெமய்யநாதன் ஆகியோரால் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற உள்ளது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

The post மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது இன்று நலஉதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Chief Minister ,Tamil ,Nadu ,
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...