×

சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது நம் கடமை

 

பெரம்பலூர்,பிப்.16: சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது நம் கடமை என்று சாலைப் பாதுகாப்பு குறித்து நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் காவல் சிறுவர் மன்றத்தின் சார்பில், சாலை விதிகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் சிறுவர் மன்ற பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சுப்பிர மணியன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் போக்குவரத்து தலைமைக் காவலர் தமிழ்ச் செல்வன் பேசியதாவது: சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். தலைக் கவசம் உயிர்க் கவசம் ஆகும். குடித்து விட்டு வாகனத்தை இயக்கக் கூடாது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது. செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்கக் கூடாது. மித வேகம் மிக நன்று என பள்ளி மாணவர் களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் சாலை விதிகளை மீறினால் தரப்படும் தண்டனை மற்றும் அபராதங்கள் பற்றியும் விரி வாக எடுத்துக் கூறினார்.

சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது நம் கடமை மட்டுமல்ல ஒவ் வொரு மனிதனின் உரிமையும் கூட. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் பள்ளியில் பயின்றுவரும் எட்டாம், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, காவல் சிறுவர் மன்றத்தின் சார்பில் பரிசுகளும் சான் றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் குணாளன், உடற்கல்வி ஆசிரியர் ரவி கலந்து கொண்டனர். இறுதியாக காவல் சிறுவர்மன்ற தன்னார்வல மாணவர்கள் நன்றி வழங்கினர்.

The post சாலையில் பாதுகாப்பாக பயணம் செய்வது நம் கடமை appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Police Children's Council ,Siruvachur Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...