×

நான் முதல்வராக இருந்தபோது 42 ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: எடப்பாடி விளக்கம்

பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நேற்று இந்த அவையில், அதிமுக ஆட்சி காலத்தில் 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டதாக தெரிவித்தேன். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீங்கள் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் கூட திறக்கப்படவில்லை என்றார். இது தவறான தகவல். நான் முதல்வராக இருந்த 2017-21 காலக்கட்டத்தில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டன. எனவே, அவரது கருத்தை திரும்பப் பெற வேண்டும்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்த 4 ஆண்டு காலத்தில் ஏதாவது புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறக்க அரசாணை வெளியிடபட்டதா?.
எடப்பாடி பழனிசாமி: 11-12-2017 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கும் அறிவிப்பு வெளியானது. அப்போது நான்தான் முதல்வராக இருந்தேன். அதேபோல், 20-1-2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே, அமைச்சர் கூறியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்.
அவை முன்னவர் துரைமுருகன்: அவர் கூறுவது சரி என்றால், அமைச்சர் பேசியதை சபாநாயகர் நீக்கி விடுவார்.
சபாநாயகர் அப்பாவு: நான் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்.

The post நான் முதல்வராக இருந்தபோது 42 ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: எடப்பாடி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Edapadi Palanisami ,Supreme Leader ,Minister ,Ma. Subramanian ,Dinakaran ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு