×

பிளஸ் 1, பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு 19ம் தேதி முதல் ஹால்டிக்கெட்

சென்னை: தேர்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மார்ச் மாதம் நடக்க இருக்கும் பிளஸ்1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள்(தட்கல் உள்பட) தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை வரும் 19ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித் தேர்வர்கள் மேற்கண்ட இணையதளத்துக்குள் சென்று, பிளஸ்1, பிளஸ் 2 மார்ச் 2024 தனித் தேர்வர்கள் என்ற பக்கத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ் 1 அரியர் மற்றும் பிளஸ் 2 ஆகிய இரண்டு தேர்வுகளையும் எழுத உள்ளவர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டும் வழங்கப்படும்.

The post பிளஸ் 1, பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு 19ம் தேதி முதல் ஹால்டிக்கெட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Examination Department ,Tatgal ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...