×

ரூ.20,000 கோடி மோசடி புகார் ‘மைவி3’ உரிமையாளரிடம் போலீஸ் காவலில் விசாரணை

கோவை: கோவையை தலைமையிடமாக கொண்டு மை வி3 ஆட்ஸ் என்ற நிறுவனம், ‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என்று கூறி நிறுவனத்தின் செயலியில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் சேர்த்து ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிறுவனத்தில் மார்க்கெட்டிங் இயக்குநராக இருந்த கோவை பீளமேட்டை சேர்ந்த சத்தி ஆனந்தன் (36) மீது போலீஸ் மற்றும் கலெக்டரிடம் புகார்கள் குவிந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சத்தி ஆனந்தன் மற்றும் 5 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சத்தி ஆனந்தனை போலீஸ் காவலில் எடுத்து நீதிமன்றம் அளித்ததை தொடர்ந்து, அவரிடம் ஒரு நாள் காவலில் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, முதலீடாக பெறப்பட்ட தொகை, அந்த தொகையில் வாங்கி குவித்த சொத்துகள், இதன் பின்னணி, மூலிகை பொருட்களை கொடுத்து பல லட்சம் ரூபாய் வாங்கி மல்டி லெவல் முறையில் எப்படி அதிக தொகை தர முடியும் என போலீசார் தீவிரமாக விசாரித்தனர். நேற்று மதியம் விசாரணை முடிந்து சத்தி ஆனந்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post ரூ.20,000 கோடி மோசடி புகார் ‘மைவி3’ உரிமையாளரிடம் போலீஸ் காவலில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : MyV3 ,Coimbatore ,MyV3Ads ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்