×

அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசு நிதியில் முறைகேடு கல்வி அதிகாரிகள் 9 பேர் மீது வழக்கு: திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி

திருச்சி: வருகின்றனர். ஒன்றிய அரசு சார்பில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆய்வக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நிதி செலவிடப்பட வேண்டும். இந்த நிதி மூலம் பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுமதியுடன் பள்ளிகளுக்கு பொருட்களை வாங்குவது வழக்கம். இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த 2019-2021 இடைப்பட்ட காலத்தில் அதிமுக ஆட்சியில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருச்சி முதன்மை கல்வி அலுவலராக அறிவழகன் என்பவர் இருந்தார். முத்துச்சாமி(மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்), சாந்தி( முதன்மை கல்வி அதிகாரி), ராஜேந்திரன்(தலைமையாசிரியர்), சற்குணன்(தலைமை ஆசிரியர்), அகிலா (தலைமை ஆசிரியை), டெஸ்சிராணி(கல்வி உதவியாளர்), ஜெய்சிங்(தலைமை ஆசிரியர்), கண்ணன்(தலைமை ஆசிரியை) ஆகிய 9 பேரும் பணியாற்றி வந்தனர்.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம், காணக்கிளியநல்லூர், ஒனையூர், வேம்பனூர், இனாம்குளத்தூர், குருவாப்பட்டி, கோப்பம்பட்டி உள்ளிட்ட 6 ஊர்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு பல்வேறு பணிகளுக்காக ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் மூலம் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எத்தகைய பொருட்கள் தேவை என்பதை தலைமையாசிரியர் இதர ஆசிரியர்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும் என தெரிகிறது.

தொடர்ந்து, பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர் விட வேண்டும். இதில், குறைந்த அளவில் தரமான பொருட்கள் வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, அந்நிறுவனத்தின் மூலம் மேற்கண்ட பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது தான் விதிமுறை என கூறப்படுகிறது. ஆனால், கல்வி அதிகாரிகள் 9 ேபரும் சேர்ந்து, டெண்டர் எதுவும் விடாமல் விதிகளுக்கு புறம்பாக குறிப்பிட்ட சில நிறுவனத்திடம் இருந்தும் மட்டும் பொருட்களை கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது.

முக்கியமாக, அரசு ஒதுக்கிய நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதன் மூலம் 6 பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1 கோடியில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக திருச்சி லஞ்சஒழிப்பு துறையினர் கல்வி அதிகாரிகள் 9 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சாந்தி, தற்போது கல்வி துறையின் இணை இயக்குனராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசு நிதியில் முறைகேடு கல்வி அதிகாரிகள் 9 பேர் மீது வழக்கு: திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Union ,Trichy ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை